யாழ்.மாவட்டத்தில் பயிலுநராகக் கடமையாற்றிய 1083 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நேற்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இல் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலென்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உரையாற்றுகையில்,
யாழ்.மாவட்டத்தில் பயிலுநர்களாகக் கடமையாற்றிய சகல பட்டதாரிகளும் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இல் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
இன்று ஆயிரத்து 83 பட்டதாரிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ள போதிலும் அனைவரு க்கும் நிரந்தரமான நியமனங்கள் வழங்கப்ப டும்.
இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்ற அனைவருடைய நியமனங்களும் 02.07.2013 இலிருந்து நடைமுறைக்கு வந் துள்ளது.
வேதனமும் நிலுவையும் நியமனத் திகதியின் காலத்திலிருந்து வழங்கப்படும்.
மேலும். கிராமங்களில் பணிபுரியவுள்ள நீங்கள் கிராமங்களில் பயன்படுத்தப்படா மல் இருக்கின்ற வளங்களை இனங்கண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.
இன்று நியமனங்கள் வழங்கப்படாத அனைவருக்கும் இன்னும் ஓரிரு தினங்களு க்குள் நிரந்தரமான நியமனங்கள் வழங்கப் படும் என்றார்.
No comments
Post a Comment