யாழ். மாவட்டத்தில் 5 ஆயிரத்து 879 குடும்பங்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை என மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யுத்தம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதிலும் முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மூன்று மாவட்டங்களிலும் இன்னமும் 6 ஆயிரத்து 756 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரத்தகவல்கள் ஊடாக அறியக் கூடியதாகவுள்ளது.
இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் 5 ஆயிரத்து 879 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 524 குடும்பங்களும் வவுனியா மாவட்டத்தில் 353 குடும்பங்களும் மீள்குடியேற்றப்படவேண்டும்.
இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முழுமையாக மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலகத் தரவுகளில் காண்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment