பிரித்தானிய ஸ்ராபோர்ட்ஷியரில் வசிக்கும் அன்டர்ஸன் டிக்ஸன் குடும்பத்தினர் தினசரி காலை உணவு வேளையில் விநோத விருந்தினர் ஒருவரை எதிர்கொள்ள நேரிடுகிறது.
ஜோ என்ற 6 வயது ஒட்டகமே அந்த விநோத விருந்தினராகும்.
நாதன் அன்டர்ஸன் டிக்ஸன் (34 வயது), அவரது மனைவி சார்லட் (31 வயது), மகன்மாரான றியுபென் (3 வயது), பியு (2 வயது), காலை உணவை உண்ண ஆரம்பிக்கையில் மேற்படி 5.83 அடி உயரமான ஒட்டகம் ஜன்னலூடாக தலையை நீட்டி உணவு மேசையில் பரிமாறப்படும் பாண், பழங்கள் உள்ளடங்கலான உணவுகளை உண்கிறது.
மிருகங்களுக்கு பயிற்சியளித்து அவற்றை திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு விநியோகித்து வரும் மிருக நிறுவனமொன்றை செயற்படுத்தி வரும் நாதனினதும் சார்லட்டினதும் பராமரிப்பில் 75 பிராணிகள் உள்ளன. ஆனால், அவற்றில் ஜோ மட்டுமே அந்த தம்பதியின் செல்லப்பிராணியாக மாறியுள்ளது.
No comments
Post a Comment