9 மாதங்களை செலவிட்டு கிராமமொன்றின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் 1.5 தொன் நிறையுடைய உலகிலேயே மிகப் பெரிய இஞ்சிப் பாணை தயாரித்து அமெரிக்க சமையல் கலை நிபுணர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜோன் லொவிட்ச் (37 வயது) என்ற இந்த நிபுணர் கடந்த பெப்ரவரி மாதம் முதற்கொண்டு இந்த இஞ்சிப் பாண் கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த கிராம உரு 152 இஞ்சிப் பாண் வீடுகள், 65 மரங்கள், 4 இஞ்சிப் பாண் கம்பி இணைப்பு வாகனங்கள், இனிப்புக்களாலான நிலக்கீழ் புகையிரதப் பாதை என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த இஞ்சிப் பாணை உருவாக்க 2240 இறாத்தல் ஐசிங்கும், 400 இறாத்தல் இனிப்புகளும் 500 இறாத்தல் இஞ்சிப் பாணும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த இஞ்சிப் பாணை காட்சிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய முழுமையாக உண்ணத்தக்க இஞ்சி பாணாக அங்கீகரித்து 'கின்னஸ்' உலக சாதனை பதிவேட்டு அதிகாரிகள் சான்றிதழை வழங்கியுள்ளன
No comments
Post a Comment