Latest News

December 27, 2013

பதி­னொரு வயதில் தகவல் தொழில்­ நுட்­பத்துறை பட்டதாரியான வஷின்யா
by admin - 0

சர்­வ­தேச ரீதி­யாக தகவல் தொழில்­நுட்­பத்­து­றையில் மிகவும் இள­வ­யது பட்­ட­தா­ரி­யாக கண்­டியைச் சேர்ந்த 11 வய­தான தமிழ் சிறுமி வஷின்யா பிரே­மா­னந்தா தெரி­வா­கி­யுள்ளார்.

கண்­டியைச் சேர்ந்த இவர் வர்த்­த­க­ரான பிரே­மா­னந்தா நட­ராஜா, லக் ஷிதா பிரே­மா­னந்தா தம்­ப­தி­யி­னரின் புதல்­வியும் கண்டி, கொழும்பு சர்­வ­தேச பாட­சா­லையின் மாண­வியும் ஆவார்.

இவர் எட்­டா­வது வய­தி­லேயே க.பொ.த சாதா­ரண தர ஆங்­கிலப் பாடத்தில் 'ஏ'சித்­தியைப் பெற்று சாதனை படைத்­த­தோடு அதே வயதில் கணனி அனு­ம­திப்­பத்­தி­ரத்­தையும் பெற்­றுக்­கொண்ட உலகின் இளம் வய­தான இணை­யத்­தள மேம்­பா­ட்டா­ள­ரா­கவும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

2002ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பிறந்த இவர் தனது மூன்­றா­வது வய­தி­லேயே மின்னஞ்சல் ஒன்றை உரு­வாக்­கக்­கூ­டிய திற­மையை பெற்­றி­ருந்தார்.

தனது எட்­டா­வது வய­தி­ல் இணைய வர்த்­தக டிப்­ளோமா பட்­ட­தா­ரி­யான இவர் சர்­வ­தேச கணினி பிர­யோக சான்­றி­த­ழையும் தனது ஒன்­பது வயதில் பெற்­ற­வ­ராவார்.

பிரிட்டிஷ் கணினி சமூகம் தொழில் நுட்­பத்தில் இவரை சர்­வ­தேச ரீதி­யாக மிகவும் இள­வ­யது பட்­ட­தா­ரி­யென அறி­வித்­துள்­ளது.
இதன்படி பிரிட்­டனின் கணினி சமூ­கத்தின் தகவல் தொழில் நுட்ப பட்­டத்தை பெற்­றுள்ளார். சர்­வ­தேச ரீதி­யாக இவரே தகவல் தொழில் நுட்பத் துறையில் மிகக் குறைந்த வயது பட்­ட­தா­ரியும் ஆவார்.

தாய் நாட்­டிற்கு மென்­மேலும் புகழ் சேர்க்கும் ரீதியில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு மேலும் பல சாத­னை­களை நிலை­நாட்ட தொடர்ந்தும் தனது முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார். இதேவேளை, இவர் இசைக்கருவிகளை இசைப்பதில் தங்கப்பதக்கம் பெற்றவராவார்.
மேலும், ஆங்கிலம், சிங்களம், பிரான்ஸ், ஜேர்மன் உட்பட பல மொழிகளை கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments