Latest News

December 19, 2013

அமெரிக்காவை எச்சரித்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்: ராமதாஸ்
by admin - 0

 
அமெரிக்காவையும்,  பாகிஸ்தானையும்

எச்சரிக்கத் 
துணிந்த இந்தியா,
இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக
அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும்
வகையில், இந்தியாவில் அமெரிக்க
தூதரகத்துக்கும், தூதரகப்
பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த
பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய
அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. வெளிநாட்டில் இந்தியத் தூதர் ஒருவர்
கைது செய்யப்பட்டதும்,
அவரது தகுதிக்கு குறைவான முறையில்
நடத்தப்பட்டதும் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்ற முறையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கவை. வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் அவமதிக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் உறவையே துண்டித்துக் கொள்ள துணிந்த இந்திய அரசு, ஓர் இனத்தையே அழித்த இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்
விவாதம் நடத்தக்கூட மறுப்பது கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவையும், பாகிஸ்தானையும்
எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் இனியும்
இரட்டை நிலையை மேற்கொள்ளாமல்,
அமெரிக்காவிடம் காட்டிய
அதே அணுகுமுறையை, தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கையிடமும் இந்தியா காட்ட வேண்டும். இல்லாவிட்டால், இதற்குக் காரணமானவர்களுக்கு தமிழக மக்கள் சரியான நேரத்தில், சரியான பதிலடி தருவார்கள் என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments