Latest News

December 12, 2013

ஊடக சுதந்திரம் எங்கே?- அரியநேந்திரன் கேள்வி
by admin - 0

சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அந்த சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இந்தக்
குற்றச்சாட்டை நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து சுமத்தினார். இலங்கையின் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் மயில்வாகனம் நிலமராஜன், நடேசன் மற்றும் தராகி சிவராம் உட்பட்டோர் கொல்லப்பட்டனர். எனினும் இதுவரை அவர்களை கொன்றவர்கள் யார் என்ற விடயம் வெளியாகவில்லை. இந்தக்கொலைகளுக்கு காரணமானவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளனர். எனினும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் தொடர்ந்தும் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். வடக்கு கிழக்கில் எந்த ஒரு நிகழ்வு இடம்பெற்றாலும் அதில் ஊடகவியலாளர்களை கண்காணிப்பதற்காக புலனாய்வு பிரிவினர்
அதிகமாக பிரசன்னமாகின்றனர். சனல் 4 கெலம் மெக்ரே இலங்கைக்கு வந்தபோது அவரை வவுனியாவுக்கு செல்லாமல் தடுத்தமையானது ஊடக
சுதந்திரம் என்று கூறமுடியுமா? என்று அரியநேந்திரன் கேள்வி எழுப்பினார்.
« PREV
NEXT »

No comments