சிரியாவில் இரு ஸ்பெயின் நாட்டு ஊடகவியலாளர்கள் அல்–-கொய்தாவுடன் தொடர்புடைய குழுவொன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
எல் முன்டோ ஊடக நிருபர் ஜாவியர் எஸ்பினோஸாவும் சுதந்திர புகைப்படக் கலைஞரான றிகார்டோ கார்சியாவில னோவாவும் ‘ஐ. எஸ். ஐ. எஸ்’ போராளிக் குழுவால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் துருக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள வட ரக்சா மாகாணத்திலுள்ள சோதனைச்சாவடியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சிரியாவின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணியொருவர் டமஸ்கஸுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை கடத்திச் செல்லப்பட்டதாக சிரிய செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஸான் ஷேடோனா என்ற மேற்படி
சட்டத்தரணியும் ஏனைய 3 செயற்பாட் டாளர்களும் டோமா நகரிலுள்ள வன்முறை ஆவணப்படுத்தல் நிலைய அலுவலகத்திலிருந்து இனந்தெரியாத ஆயுத தாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment