நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவை அமெரிக்கா நியூ ஜெர்சி நகரில் டிசெம்பர் 6ம் நாள் வெள்ளிக்கிழமை கூடியது.
ஒரு தொகுதி உறுப்பினர்கள் சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் தொலைத் தொடர்பு தொழிநுட்ப வாயிலாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்வின் முதல் அம்சமாக முதல் தவனைக் கால நிகழ்வினை அவைத்தலைவர் கௌரவ பொன் பால ராஜன் அவர்கள் மாவீரர்களுக்கான தீபச் சுடர் ஏற்றுதலுடன் ஆரம்பித்து வைத்தார்.
இச்சுடரினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர் கௌரவ உஷா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் ஏற்றியதனை தொடர்ந்து உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அகவணக்கத்துடன் மாவீரர்களுக்கான மலர் அஞ்சலி செழுத்தினர்.
அதனை அடுத்து டென்மார்க் நாட்டில் இருந்து வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ,மலேசிய நாட்டில் இருந்து வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ,நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கௌரவ மேலவை உறுப்பினர் சுழடிநசவ நுஎயளெ அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்த மதிப்பிற்குரிய தமிழீழ உணர்வாளர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மைய உறுப்பினருமான தோழர் தியாகு அவர்கள் , சென்னைப் பல்கலைக் கழக அரசியற்துறை பேராசிரியரும் பீடாதிபதியும் ஆகிய கௌரவ ராமு மணிவண்ணன்,பேராசிரியரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக் குழுவின் அங்கத்தவரும் ,நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தூண்கள் ஆக விளங்கும் கௌரவ ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத் தமிழர்கள் விடுதலையில் அது கொண்டிருக்கும் வகிபாகம் ,அதன் எதிர்காலம் உறுப்பினர்களின் கடமைகள் குறித்து மிக காத்திரமான உரைகளை நிகழ்த்தியிருந்தார்கள்.
பேராசிரியர் சந்திரகாந்தன் அவர்கள் உறுப்பினர்களுக்கான கடமைகள் குறித்து பேசுகையில் ‘நாம் இறந்த மக்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காகவும், இருக்கும் மக்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும் சுமந்து கொண்டு எங்கள் எதிர்கால கடமைகளை ஆற்ற வேண்டிய நிலையில் இருப்பதனை உணர்வு பூர்வமாக சுட்டிக் காட்டியிருந்தார்.
புதிய பழைய உறுப்பினர்களின் அறிமுகவுரையைத் தொடர்ந்து உறுப்பினர்களால் புதிய தவணை க் காலத்திற்கான அவைத்தலைவர் தெரிவு இடம் பெற்றது , கௌரவ கலாநிதி தவேந்திரா அம்பலவாணர் அவர்கள் அவைத் தலைவராக தெரிவு செய்யப் பட்டார். பின்னர் பிரதி அவைத் தலைவராக பிரித்தானியாவைச் சேர்ந்த கௌரவ தில்லை நடராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
No comments
Post a Comment