Latest News

December 09, 2013

இலங்கையின் கொடியினை ஏற்ற மறுத்த விவசாய அமைச்சர்; பரிசளிப்பு விழாவில் சம்பவம்
by admin - 0

வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கென ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளளார். அதன்படி மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய நிகழ்வில் அவரைத் இலங்கையின் கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார். அதன்பின்னர் இலங்கையின் கொடியை மடு வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.அன்ரனியும், பாடசாலைக்கொடியைத் திருமதி சரோஜினி ரவீந்திரனும் ஏற்றி வைத்தார்கள். அங்கு மாகாணக்கொடிக்கென கொடிக்கம்பம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் பின்னர் இடம்பெற்ற பிரதம விருந்தினர் உரையின்போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையினை அனைத்துத் திணைக்களங்களுக்கும் விடுத்துள்ளார்.   இதேவேளை, இலங்கையின் தேசியக்கொடியில் வாளேந்திய சிங்கம் நிற்கும் வரையில் தமிழர்களின் தேசியக்கொடியாகவும் அதனைக் கருதமுடியாது. அத்துடன் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான தேசிய அடையாளமாக சிறுத்தையே பொருத்தமானது என்றும் அவர் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கூறி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments