Latest News

December 21, 2013

66 வயதில் கணவனுக்காக காலில் சப்பாத்து இல்லாமல் மரதனில் வென்ற பெண்
by admin - 0

மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற லதா பகவான் காரேயின் பிண்ணனியில் சோகமும் மறைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பாராமதியில் மூத்த குடிமக்களுக்கான 3 கிலோமீற்றர் மரதன் போட்டி நடைபெற்றது.
இதில் பிம்பிளி என்ற பகுதியை சேர்ந்த லதா பகவான் கரே(வயது 66) என்ற கலந்து கொண்டு 5,000 பரிசை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவருக்காகவே ஓடி பரிசினை வென்றதாக தெரிவித்துள்ளார் லதா.
மேலும் அவர் கூறுகையில், என் கணவர் இருதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே பிம்பிளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான் ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது.
அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாய கூலி வேலை மூலம், தினம் 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம் என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை.
அப்போது தான் இப்போட்டி பற்றி கேள்விப்பட்டதால், பந்தயத்தில் ஓடி பரிசை வெல்ல முடிவு செய்தேன்.
கணவரை காப்பாற்ற இதற்கு மேல் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவருக்கு திருமணமான ஒரு மகனும், மூன்று பெண்களும் உள்ளனர்.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்ததை தொடர்ந்து, பலருக்கு பணம் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

« PREV
NEXT »

No comments