Latest News

November 23, 2013

அதிரடிப்படையைச் சேர்ந்தோரே மர்மமனிதர்கள்
by admin - 0

நிந்­தவூர் பிர­தே­சத்தில் நட­மா­டிய மர்ம மனி­தர்கள் விசேட அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்­த­வர்­களே
இவர்கள் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பொலிஸ் துறை உறு­தி­ய­ளித்­தி­ருப்­பதால் நிந்­தவூர் பிர­தேச மக்கள் அமைதி பேணி இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.
கடந்த இரண்டு மூன்று வார­மாக இரவு நேரங்­களில் நிந்­தவூர் பிர­தேச வீடு­களில் இனந்­தெ­ரி­யாத நபர்கள் நுழை­வ­தா­கவும் பூட்­டுக்­களை உடைப்­ப­தா­கவும் வீடு­க­ளுக்குள் சென்று பதுங்­கி­யி­ருப்­ப­தா­கவும் வீட்­டுக்­கா­ரர்கள் பார்த்­த­வுடன் தப்பிச் செல்­வ­தா­கவும் மக்­களால் அதி­க­மான முறைப்­பா­டுகள் கிடைக்கப்பெற்­றன.
இது பற்றி சம்­மாந்­துறை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யுடன் பேசி நிந்­தவூர் ஜும்ஆப் பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபை, பிர­தேச சபை தவி­சாளர் பிர­தேச செய­லாளர், மாகாண சபை உறுப்­பினர் என்­ப­வர்­க­ளுடன் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (17) காலை கூட்டம் ஒன்று கூடி விழிப்பு குழுக்­களை உசார்ப்­ப­டுத்­து­வது எனவும் மக்­களை விழிப்­புடன் இருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­வது எனவும் இரவு ஒன்­பது மணிக்கு பின்னர் ஊரிலே நட­மா­டு­ப­வர்கள் தமது ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த வேண்டும் எனவும் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.
இந்த முடிவு பெரிய பள்­ளி­வாசல் உள்­ளிட்ட சகல பள்­ளி­வா­சல்­க­ளிலும் ஒலி­பெ­ருக்­கி­களில் அறி­விக்­கப்­பட்­டது.
ஞாயிறு இரவு நானும் எனது பாது­கா­வ­லர்­களும் பிர­தேச சபை உப­த­வி­சாளர் இன்னும் சில ஆத­ர­வா­ளர்­க­ளுடன் ஊரின் சில வீடு­க­ளுக்கும் மர்ம நபர்கள் வந்­தது பற்றி கேள்­வி­யுற்று அவ்­வி­டங்­க­ளுக்கு (நிந்­தவூர் முதலாம் பிரி­விற்கு) சென்­றி­ருந்த வேளை நிந்­தவூர் நான்காம் பிரிவு கடற்­கரையில் மர்ம நபர்­களை மக்கள் சுற்றி வளைத்து பிடித்­துள்­ளதாக தொலை­பேசி அழைப்பு ஒன்றுவந்­ததைத் தொடர்ந்து அவ்­வி­டத்­திற்கு விரைந்தோம்.
அங்கு மக்கள் கூடத் தொடங்­கினர். நான் மக்­க­ளுக்கு மத்­தியில் நின்ற நபர்­களை நெருங்கி என்னை அறி­மு­கப்­ப­டுத்தி விட்டு நீங்கள் யார் என்று கேட்ட போது தாம் விசேட அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்­த­வர்கள் என்றும் விசேட தேவைக்­காக இங்கு வந்­த­தா­கவும் கூறினர்.
அதில் நான்கு பேர் ஆயுதம் தரித்து சீரு­ டையில் நின்­றனர். இருவர் சீரு­டையில் இல்­லாமல் சிவிலில் இருந்­தனர்.
உங்­களை யார் இங்கு வரச் சொன்­னது நீங்கள் வரு­வது பொலி­ஸா­ருக்கு தெரி­யுமா என்று கேட்­ட­தற்கு நாங்கள் விசேட அழைப்பில் வந்­தி­ருக்­கிறோம் என்­றனர்.
அப்­போது அங்­கி­ருந்­த­வர்­களில் ஒருவர் கூறினார் நான் தான் அவர்­களை அழைத்தேன் என்று. அதன் பின் நான் எனது பாதுகாப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் மூல­மாக சம்­மாந்­துறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியை தொடர்பு கொண்டு உடன் ஸ்தலத்­திற்கு வரு­மாறு வேண்­டுகோள் விடுத்தேன்.
அவர் வர சற்றுதாம­த­மா­கி­யது. அதற்­கி­டையில் களு­வாஞ்­சிக்­கு­டியில் இருந்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் வந்­தி­ருந்­தனர். மக்கள் திரள் திர­ளாக வரத் தொடங்­கினர். கடந்த சில நாட்­க­ளாக மர்ம நபர்­க­ளது நட­வ­டிக்­கை­க­ளால் பீதி­யுற்­றி­ருந்த மக்கள் தமது ஆத்­தி­ரத்தை பிடி­பட்ட நபர்­களின் மேல் காட்ட முனைந்­தனர். ஆத்­தி­ரத்தில் அவர்கள் செய்ய முனைந்­தது இயல்­பான விட­யமே. அவ்­வாறு அவர்கள் முனைந்­தது தவ­றென்று கூற முடி­யாது.
மக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது மிகவும் சிர­ம­மாக இருந்­தது. இந்த நிலை­மையை எனது பாது­காப்பு ஊழி­யர்கள் தங்கள் மேல­தி­கா­ரி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்தி அவ­ரது அறி­வு­றுத்­தலின் பேரில் என்னை அவ்­வி­டத்தை விட்டுச் செல்ல வேண்­டினர். எனினும் நான் சம்­பவ இடத்­திற்கு சற்று அப்பால் சென்று மக்­க­ளிடம் நிலைமை பற்றி உரை­யாடிக் கொண்­டி­ருந்தேன்.
பொலிஸார் வந்­ததும் நான் மீண்டும் அவ்­விடம் சென்று விட­யத்தை விளக்­கிக்­கூறி இவர்­களை கைது செய்யும்படி கேட்டேன்.
அதில் ஒரு சந்­தேக நபர் துப்­பாக்­கியைப் பறித்து வானத்தை நோக்­கியும் நிலத்தை நோக்­கியும் சுடத் தொடங்­கினார். அதன் பின் வாக்­கு­வா­தங்­களின் பின்னர் சுடு­வதை நிறுத்­தினார்.
பின்னர் சந்­தேக நபர்­களை பொலிஸ் வண்­டியில் ஏற்றிக் கொண்டு சென்­றனர். இதற்­கி­டையே நான் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர், உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் ஆகி­யோ­ருடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி நிலை­மையைக் கூறினேன்.
பொலிஸ் வண்­டியில் சம்­மாந்­துறை பொலிஸ் நிலையம் நோக்கி செல்லும் போது குறித்த நபர்கள் தம்மால் பொலி­ஸுக்கு வர முடி­யாது எனவும் தாம் தமது முகா­முக்கு செல்ல விருப்­ப­தா­கவும் முரண்டு பிடித்­தனர்.
இருந்­தாலும் சம்­மாந்­துறை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியின் முயற்­சியால் அவர்கள் சம்­மாந்­துறை பொலிஸ் நிலை­யத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டனர். அப்­போது அங்கு நானும் சென்­றி­ருந்தேன்.
பொலிஸ் நிலை­யத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் வந்­தி­ருந்தார். அதே­வேளை பொது மக்­க­ளது தாக்­கு­த­லுக்­குள்­ளான பொலி­ஸாரை சம்­மாந்­துறை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று அனு­ம­தித்­தி­ருந்தேன். இதன்போது, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி ­யட்­ச­கருக்கு, நடந்­ததை விளங்­கப்­ப­டுத்­தினேன். அவ­ரிடம் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
எம­தூரின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று வேண்­டுகோள் விடுத்தேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.அதி­காலை நான்கு மணி­ய­ளவில் நான் கல்­முனை வைத்­தி­ய­சா­லைக்கு சென்று பிர­தேச சபை தவி­சா­ளரை பார்­வை­யிட்டு வீடு திரும்பும் போது வீதித் தடைகள் ஏற்­ப­டுத்­த ப்­பட்­டி­ருந்­தன. இளைஞர் கூட்­ட­மொன்று தடை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஏற்­பாட்­டா­ளர்கள் யாரென்று அறி­ய­வில்லை. மக்­களின் பிரதிநிதி­யா­கிய நான் மக்­க­ளது மனங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டி­யவன் என்ற படியால் இந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை நான் ஆத­ரித்தேன்.
மறுநாள் காலை ஹர்த்தால் வெற்­றி­க­ர­மாக நடை­பெறத் தொடங்­கி­யது. அன்று பின்­னேரம் சம்­மாந்­துறை பொலிஸில் விசேட கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாக தகவல் கிடைத்­தது. நாங்கள் சென்றோம். அங்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்ட பொலிஸ் உயர் அதி­காரிகள், மாகாண சபை உறுப்­பினர் பிர­தேச செய­லாளர் உட்­பட பலர் பங்­கு­பற்றி பேசினோம்.
அங்கு எஸ்.எஸ்.பி. பேசு­கையில்,
சந்­தேக நபர்கள் திரு­டி­ கையும் கள­வு­மாக பிடி­ப­டா­ததால் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­தென்றும் சீருடை இன்றி வந்­த­தற்கு ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.
இதற்­கேற்ப நாங்கள் இந்த செய்­தியை மக்­க­ளுக்கு தேசிய ஊட­கங்கள் மூல­மாக அறி­யப்­ப­டுத்த வேண்டும் என்று கேட்­ட­தற்கு உடன் ஒத்­துக்­கொண்ட அவர்கள் பொலிஸ் பேச்­சாளர் அஜித் ரோக­ண­வுடன் தொடர்பு கொண்டு குறித்த செய்­தியை தொலைக்­காட்சி மூலம் சொல்ல வேண்டும் என்று கூற உடனே அதுவும் நடந்­தது.
ஹர்த்தால் இன்­றுடன் முடிய வேண்டும் நாளை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று முடி­வெ­டுக்­கப்­பட்டு அம்­மு­டிவு பள்­ளி­வாசல் மூல­மாக மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட வேண்டும் என்ற தீர்­மா­னமும் அங்கு எல்­லோ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.
நான் ஊரின் பாது­காப்புக் குறித்து கேள்வி எழுப்­பினேன். அதற்கு எழு­பத்­தைந்து பொலி­ஸாரைத் தரு­கின்றேன் என்ற கூறிய எஸ்.பி. பிரச்­சினை முடியும் வரை அவர்­களை வைத்­தி­ருங்கள் என்று கூறினார். அதற்கு நாங்கள் அப்­படித் தேவை­யில்லை பொலிஸ் வரும் போது பள்­ளி­வா­ச­லுக்கு தெரி­யப்­ப­டுத்தி விட்டே வர வேண்டும் என்று கேட்­டுக்­கொண்டோம். அதற்கும் அவர்கள் இணங்­கினர்.
ஊர் திரும்பி பள்­ளி­வா­சலில் மக்­க­ளுக்கு ஒலி­பெ­ருக்கி மூலம் விளக்­க­ம­ளித்தோம். ஹர்த்­தாலை இன்­றுடன் நிறுத்­துவோம் என்று கூறினேன். சிலர் எதிர்த்­தனர். பலர் ஆமோ­தித்­தனர்.
மறுநாள் பொலிஸார் முதல் நாளைய கூட்ட முடி­விற்­கேற்ப வீதித்­த­டை­களை அகற்றத் தொடங்­கினர். அதனை ஆட்­சே­பித்த சிலர் பொலி­ஸாரின் கண்­ணீர்ப்­புகை தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கினர். இதன் போது வீதியில் வழமை போல கூடி நின்று வேடிக்கை பார்த்த அதி­க­மா னோர் தாக்­கப்­பட்­டனர். வாக­னங்கள் சேத­மாக்­கப்­பட்­டன. 21 பேர் கைது செய்­யப்பட்டு அரச சொத்­து­க­ளுக்கு சேதம் விளை­வி த்தல் போன்ற குற்­றத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டனர்.
அதில் புதன்­கி­ழமை சம்­மாந்­துறை மாவட்ட நீதி­வானால் பதி­னெட்டு வய­துக்கு குறைந்த ஆறு பேர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் ஏனையோர் கடந்த 22ஆம் திகதி வரை தடுப்­புக்­கா­வலில் வைக்க நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்தார். இதற்­கி­டையில் நேற்று முன்­தினம் மர்ம நபர்­களின் நட­மாட்டம் குறித்து முறைப்­பா­டுகள் தொடர்ந்தும் வந்து கொண்டே இருந்தன. இது குறித்து கடந்த புதன்­கி­ழமை காலையும் நான் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்­திரன் போன்­றோ­ருடன் பேசினேன். இந்­நி­லைமை தொடர்­வதை தடுக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார். இந்த சூழ்­நி­லையில் பொலி­ஸா­ருடன் முரண்­பாடு ஏற்­பட்­டி­ருப்­பதால் நிலைமை சீர­டைய சில நாட்கள் செல்லும் மக்கள் பொறுப்­பாக நடந்து கொள்ள வேண்டும். அதேநேரம் விழிப்­பா­கவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்­கின்றேன். சட்­டமும் பொலிஸும் இய­லு­மா­ன­ளவு நட­வ­டிக்கை எடுக்க ஒத்­துக்­கொண்­டி­ருக்கும் போது ஏன் இன்னும் நாம் ஹர்த்­தாலை தொடர வேண்டும்.
அவர்கள் கேட்கும் கேள்­விக்கு நம்மிடம் பதிலில்லையே! ஏன் நாம் இரண்டாவது நாள் ஹர்த்தாலைத் தொடர வேண்டும். இது எவ்வளவு வீண் பிரச்சினைகளுக்கு இன்று வழிவகுத்து விட்டன. மறியலில் இருப்போரது குடும்ப நிலை என்ன?
இதனை ஒரு குழு தூண்டி விட்டு இதில் சுயலாபம் தேடுகிறதோ என்னவோ தெரி யாது. அப்படியிருந்தாலும் இளைஞர்கள் தமது செயற்பாடுகளை சிந்தித்து செய்ய வேண்டும். ஊர்க் கட்டுப்பாட்டை மீறி நடக்கக்கூடாது. ஊருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
நாங்கள் உங்களது வாக்குகளால் பதவிக்கு வந்தவர்கள் என்றும் உங்கள் நலனிலே அக் கறை கொண்டவர்கள் உடனடியாக பலன் கொடுக்கின்ற நீர்க்குமிழி போன்ற பூச்சாண்டி முடிவுகளையன்றி நீண்ட நாள் நிலைத்து நிற்கக் கூடிய சிறந்த முடிவுகளையே எடுப்போம் அம்முடிவுகளின் பலன் கிடைக்க சில நாட்கள் சென்றாலும் சிறந்த முடிவுகளாகவே அவை இருக்கும் எனவும் கூறினார்.
« PREV
NEXT »

No comments