Latest News

November 19, 2013

அம்­பா­றையில் நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­படும் காணி­களின் பரப்­ப­ளவில் வீழ்ச்சி
by admin - 0

அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த முறை நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­பட்ட 05 ஆயிரம் முதல் 06 ஆயிரம் ஹெக்­டெயர் வரை­யி­லான காணி­களில் கரும்புச் செய்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளதால் இம்­முறை நெற் செய்கை மேற்­கொள்­ளப்­படும் காணி­களின் பரப்­ப­ளவில் வீழ்ச்சி ஏற்­படும் என அம்­பாறை மாவட்ட விவ­சாயப் பிரதிப் பணிப்­பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில், கடந்த பெரும்­போ­கத்­தோடு ஒப்­பி­டு­கையில் இந்த முறை 05 ஆயிரம் முதல் 06 ஆயிரம் ஹெக்ெ­டயர் காணி­களில் நெற்­செய்கை நட­வ­டிக்கை இடம்­பெ­ற­மாட்­டாது. கடந்த பெரும் போகத்தில் நெற்­செய்­கைக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட காணி­களில் 05 ஆயிரம் முதல் 06 ஆயிரம் ஹெக்­டெயர் காணிகள் இம் முறை கரும்புச் செய்­கைக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இறக்­காமம் மற்றும் தமன ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளி­லேயே மேற்­படி 05 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் ஹெக்டெயர் பரப்­ப­ள­வுள்ள காணி­களில் கரும்புச் செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. அந்த வகையில் இம்­முறை பெரும்போகத்தில் அம்­பாறை மாவட்­டத்தில் 65,000 தொடக்கம் 70,000 ஹெக்­டெ ­யர் வரையிலான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments