Latest News

November 19, 2013

உஷாரா இல்லாம போயிட்டேன்! - ஹன்சிகா
by admin - 0

கிட்டத்தட்ட லிவ் இன் பார்ட்னர்கள் போல இருந்து பின்னர் பிரிந்துபோன சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெம்பாக இருக்க, மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் இப்போதைய காதலியான ஹன்சிகா. எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன் என்பதுதான் இப்போது அவர் அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனமாம்!



பிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகிவிட்டார் என்று தெரிந்ததிலிருந்தே, சிம்புவுக்கு நயன்தாராவை ஜோடியாக்க முயற்சி நடந்து வந்தது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நயன்தாராவுடன் ஜோடியாக நடிப்பேன் என்று அவரும் சொல்லிவிட்டார். நயன்தாராவும் நடிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்க நிலையில் நயன்தாரா பிறந்த நாளன்று சிம்பு அவருக்கு வாழ்த்துச் சொன்னதோடு, இந்த வாய்ப்பையும் சொல்லி வைக்க, அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு கதையையும் கேட்டு முடித்துவிட்டார். ஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் - சிம்பு பகுதிகளை இயக்குகிறார். விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து கலவரமாகிப் போயிருக்கும் ஹன்சிகா, 'எல்லாரும் அப்பவே உஷாரா இருக்கச் சொன்னாங்க... அவங்க சொன்ன மாதிரியே ஆகிடுச்சே,' என புலம்பி வருகிறாராம். தோழிகளின் சமாதானம் எதுவும் எடுபடவில்லையாம்! சரி விடுங்க... பிரபு தேவா படத்துல கமிட் ஆனா கவலை குறைஞ்சிடப் போகுது!



« PREV
NEXT »

No comments