Latest News

November 19, 2013

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை
by admin - 0



பொநலவாய மாநாடு நடைபெற்றபோது இரவு நேர காவல் கடமை புரிந்த காவற்துறையினர் மீது புலானாய்வு காவற்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக காவற்துறை தலைமையக தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் இரவு நேரங்களில் கொழும்பு நகரின் பல இடங்களுக்கும் சென்று தகவல்களை சேகரிக்க உதவியதாகவும் காவற்துறையிருக்குரிய கடமையில் இருந்து தவறினார்கள் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையிலும் விசாரணை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் பல செய்திகளை சர்வதேச ஊடவியலாளர்கள் பெற்றுக் கொண்டதாகவும் காவற்துறையினரின் கவனயீனமான நடவடிக்கைகள், மக்களை தேவையின்றி விசாரணைக்கு உட்படு காட்சிகளை பதிவு செய்துள்ளதாகவும் இரகசிய தகவல் கிடைத்துள்ளது என்றும் அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சனர் 4, பிபிசி, ரொய்டர் போன்ற ஊடகவியலாளர்கள் கொழும்பில் இரவு நேரங்களில் பெற்றுக்கொண்ட சில காட்சிகள் வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றன. அந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் காவல் கடமையில் ஈடுபட்ட காவற்துறையினர் மீது விசாரணை நடபெறுவதாக கூறப்படுகின்றது. 20 ஆயிரம் காவற்துறையினர் மாநாட்டின்போது கடமை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments