யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளராக கடமையாற்றும் உதயராசா சாளின் என்பருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 26 ஆம் திகதி இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வலம்புரி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
தொலைபேசி மூலம் தங்களை அறிமுப்படுத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வலம்புரிப் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் தமது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் உத்தியோக பூர்வமாக இந்த அழைப்பு வரததால் இந்த விசாரணைக்கு வரமுடியாது என்று குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
‘ பயங்கரவாதத்திற்கு ஆதரவாகச் செயற்படுகின்றீர்கள் உங்களுக்கு காலம் கிட்டிவிட்டது’ என்று தொலைபேசியில் அழைத்தவர் தெரிவித்து தொலைபேசி அழைப்பை துண்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனேவ உதயராசா சாளின் கடந்த 08.03.2013 ஆம் திகதி வீதியில் இனந்தெரியாத நபர்களினால் யாழ்ப்பாணத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளாகியிருந்த நிலையில் யாழ் போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமது பணிகளை மேற்கொண்டு கடந்த மாதம் 27 ஆம் திகதி வலிகாhம் வடக்கில் உள்ள கட்டுவன் பகுதியில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடிடிப்பு சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் 5 பேர் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு அவர்களின் அவர்கள் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் யாவும் அழிக்கப்பட்டு படையினரால் அச்றுத்ப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் ஊடகவியலாளர்கள் மீதான அச்றுத்தல் இன்றும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது.
No comments
Post a Comment