Latest News

November 28, 2013

வலிகாமத்துக்குச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்
by admin - 0

வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இரானுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் வைத்து இரானுவத்தினரால் இன்று மாலை திருப்பி அனுப்பபட்டுள்ளளார். நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருக்கின்ற வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் மற்றும் கோவில்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை இரானுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்படி பிரதேசத்தின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழூவினர் இன்று மாலை நேரடியாக அப்பிரதேசத்திற்கு விஐயம் மேற்கொண்டனர். இதன் போது வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயமென்று இரானுவ எல்லைக்கு அப்பாற் செல்ல இரானுவத்தினர் அனுமதிக்கவில்லை. அத்தோடு அங்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியும் வேண்டுமென்றும் இல்லாவிட்டால் செல்லமுடியாது என்றும் இரானுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலிகாமம் வடக்கிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நீண்டகாலமாக அகதி முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர். இந்நிலையில் அந்த மக்களுடைய வீடுகள், பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் என்பனவற்றை இhனுவத்தினர் இடித்தழிக்கின்றனர். இதனைப் பார்வையிடுவதற்கு சென்றிருந்த நிலையில் பாதுகாப்ப அமைச்சின் அனுமதியிரந்தாலே செல்ல முடியுமென் இரானுவத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அங்குள்ள விடுதிகளுக்கு தென்னிலங்கையிலிருந்து வருகின்றவர்கள் எந்த அனுமதியுமின்றியும் செல்ல முடியும். இது தான் இங்குள்ள நிலைமையாக இருக்கின்றது. இந்நிலையில் நாம் அங்கு செல்ல முடியாதென இரானுவத்தினர் தெரிவக்கின்றனர். இந்த மாகாணத்தின் முதலமைச்சரே செல்ல முடியாத நிலைமை இங்கு தான் நடக்கின்றது. இவ்வாறான நிலை வேறு எங்கும் நடக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எமது சொந்த இடத்திற்கு நாமே செல்ல முடியாத மிக மோசமான நிலை வடக்கு கிழக்கு மாகாணத்தில் தான் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments