யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் நாவலர்விழா 24ஆம் திகதி காலை 9 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் (நாவலர் வீதி, யாழ்ப்பாணம்) யாழ்ப்பாண தமிழ்ச்சங்க உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெறும்.
திரு. திருமதி. கனகசபை அருள்நேசன் தம்பதியர் மங்கள விளக்கேற்றுவர். திருமதி விஜயதர்சினி தயாபரன் தமிழ் தெய்வ வணக்கப் பாடல் பாடுவார். யாழ். தமிழ்ச் சங்க பொருளாளர் ச. லலீசன் வரவேற்புரை ஆற்றுவார். யாழ். தமிழ்ச் சங்க தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தொடக்கவுரையாற்ற பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு நாவலரும் தமிழ்த் தேசியமும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.
யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி எஸ். நிதர்சனன் நாவலர் இசையரங்கில் பாடுவார். நாவலரின் கனவை நனவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது அவரது சைவப்பணிகளே என்றும் தமிழ்ப் பணிகளே என்றும் வாதிக்கும் பட்டிமன்றமும் இடம்பெறும். செல்வமனோகரன், இ. சர்வேஸ்வரா ஆகியோர் சமயப்பணிகளே என்றும் கு.பாலசண்முகன், சி. ரமணன் ஆகியோர் தமிழ்ப் பணிகளே என்றும் வாதிப்பர்.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா நடுவராக பணிபுரிவார்.
No comments
Post a Comment