தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தவாரம் புலிகள் ஆதரவு சக்திகள் பெருமெடுப்பிலான எதிர்ப்பு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்தவாரம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்துக்குக்கான இரகசிய ஆயத்தப் பணிகளில் பல பல்கலைக்கழக பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோரை தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களில் சிலர், பல்கலைக்கழகத்தை உடனடியாக மீளத் திறக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டை முன்னிட்டு பல்கலைக்கழக்கழகங்கள் அனைத்துக்கும் கடந்த 8ம் நாள் தொடக்கம், 10 நாட்கள் விடுமுறை விடப்பட்ட அதேவேளை. யாழ்.பல்கலைக்கழகத்துக்கு மட்டும் டிசெம்பர் 2ம் நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்புப் போராட்டங்களின் மூலமோ, பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலமோ பிரிவினைவாத சிந்தனைகளை தலைதூக்கச் செய்வதற்கு அரசாங்கம் எவரையும் எந்தச் சூழலிலும், அனுமதிக்காது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
No comments
Post a Comment