பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸிற்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வத்திக்கானில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக வத்திக்கானுக்கு விஜயம் செய்த நிலையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ பரிசுத்த பாப்பரசரை நேற்று முன்தினம் வத்திகானில் வைத்து சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அழைப்பிதழை இதன் போது பாப்பரசர் முதலாவது பிரான்சிஸிற்கு கையளித்த பாதுகாப்பு செயலாளர் பாப்பரசருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
யுத்தத்துக்கு பின்னர் இலங்கை அடைந்துவரும் அபிவிருத்திகள் குறித்து இதன்போது சுட்டிக்காட்டியுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையானது தற்போது புதிய நல்லிணக்க மற்றும் அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதாக பாப்பரசரிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்துவத ற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறி த்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
பாப்பரசருடனான இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் துணைவி இயோமா ராஜபக் ஷ, வத்திகானுக்கன இலங்கையின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க,கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பேஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment