அமெரிக்க கோடீஸ்வரரான டெனிஸ்ரிட்டோ 2017 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமளவில் இரு விண்வெளிவீரர்களுடன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலமொன்றை ஏவ திட்டமிட்டுள்ளார்.
அந்த விண்வெளிவீரர்கள் இருவரும் 16 மாத காலத்தில் 800 மில்லியன் மைல் தூர பயணத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 100 மைல் தூரத்துக்குள் விண்கலத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கிரகம் பூமிக்கு மிகவும் நெருங்கி வருகின்ற நிலையிலேயே இந்த விண்வெளிப் பயணத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பூமியும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும் அரிய நிகழ்வு ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் இரு தடவை நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.
இந்நிலையில் நியூயோர்க் நகர பொறியியலாளரான டெனிஸ் ரிட்டோ, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதிக்கும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதிக்குமிடையில் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்வெளி வீரர்களுடன் விண்கலத்தை ஏவத் தவறினால் அவர் மீளவும் தனது முயற்சியை மேற்கொள்ள 2031 ஆம் ஆண்டு வரை காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டிற்குப் பின் 2021 ஆம் ஆண்டளவிலும் பூமியும் செவ்வாயும் ஒன்றையொன்று நெருங்கி வருகின்ற போதும், இதன்போது இரு கோள்களுக்குமிடையிலான தூரம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும்.
No comments
Post a Comment