மனிதனின் பாதம், அக்குள், தொப்புள் மற்றும் கண்ணீர் என்பவற்றிலிருந்து பெறப்பட்ட பற்றீரியாவைப் பயன்படுத்தி பாற்கட்டியை தயாரித்து விஞ்ஞானிகள் புதுமை படைத்துள்ளனர்.
விஞ்ஞானியான கிறிஸ்ரினா அகபாகிஸும் வாசனை நிபுணரான சிஸல் டொலாஸும் 'சுயமாக தயாரிக்கப்பட்டது' என்ற தலைப்பிலான 11 பாற்கட்டி உணவுகளை உருவாக்கி அயர்லாந்தின் டப்ளின் நகரில் இடம்பெற்ற உயிரியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த பாற்கட்டிகள் ஒவ்வொன்றும் விசேடமான வடிவம், அரிய மணம் என்பவற்றை கொண்டவையாகும்.
தோல் நிபுணர்கள், விஞ்ஞானிகள், பாற்கட்டி தயாரிப்பாளர்கள் கையாளும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கி பொதுமக்களிடமிருந்து பற்றீரியாக்களை தானமாக பெற்று இந்த பாற்கட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பாற்கட்டி தயாரிப்புகள் உண்பதற்காக தயாரிக்கப்படவில்லை எனவும் அவை மனிதனுக்கும் பற்றீரியாவுக்குமுள்ள உறவை வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை உருவாக்கிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
No comments
Post a Comment