Latest News

November 25, 2013

மாவீரர் நாளைநினைவு கூர ஜே.வி.பி. முழு ஆதரவு
by admin - 0

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு முழு உரிமை உண்டு. அதேபோன்று சிங்கள மக்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்வர வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பின்படி அனைவரும் தமக்குப் பிடித்தவற்றை செய்வதற்கு உரிமையுண்டு.
மாவீரர் தினத்துக்கு பயங்கரவாதிகள்தினம் என முத்திரைக் குத்தியது இனவாத அரசியல்தான். இது பிழையான செயல். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் இந்த உரிமையை அரசியல் சுயநலம் கொண்டு தடை செய்யக் கூடாது இவ்வாறு ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், சகோதரத்துவத்துக்கான மக்கள் அரணின் உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்து;ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘போர் முடிவடைந்து தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாம் மீண்டும் மீண்டும் ஏன் பழைய அழிவுகளை பற்றி மீட்டுப்பார்க்க வேண்டும். இவற்றையயல்லாம் மறந்து முன்னேறிச் செல்வதே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.
நாட்டில் நடைபெற்ற போர் இரு தரப்பினரையும் பாதித்தது என்பதே உண்மை. சிங்களவர்களுக்கு வெற்றி, தமிழர்களுக்குத் தோல்வி என்றோ அல்லது இராணுவத்தினருக்கு வெற்றி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி என்றோ நினைக்கக் கூடாது.
போரில் வெற்றியடைந்ததைக் தலைநகரில் கொண்டாடும் போது ஏன் தமிழர்கள் உயிரிழந்த தங்களின் உறவுகளை நினைவுகூரக் கூடாது? தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகளே.
மரணித்தவர்களும் எம் நாட்டு மக்களே. அதுமட்டுமல்ல, இதை ஏன் சிங்களவர்கள் அனுஷ்டிக்கக்கூடாது? அவர்களுக்கும் தமிழர்களை நினைவுகூர முழு உரிமையுண்டு. இந்த உரிமைகளின் இனவாதத்தை திணிக்கக்கூடாது. எம்மைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு மட்டுமன்றி, சிங்களவர்களுக்கும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முழு உரிமையுண்டு’ என அவர் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments