Latest News

November 25, 2013

மண்முனைதுறைப்பற்று புதிய வீதி வயல்களின் நிலமட்டத்தை விட உயரமாக நிர்மாணிப்பதால் விவசாயம் பாதிக்கும் அபாயம்
by admin - 0




மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மண்­மு­னைத்­து­றையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் மண்­மு­னைத்­து­றைப்­பா­லத்தின் புதிய வீதி­யா­னது அங்கு பரம்­பரை பரம்­ப­ரை­யாக நெற்­பயிர் செய்­யப்­படும் வயல்­களின் நில மட்­டத்தை விட 3 அடி உய­ர­மாக நிர்­மா­ணி க்­கப்­ப­டு­வதால் விவ­சா­யிகள் எதிர்­கா­லத்தில் விவ­சாயம் செய்ய முடி­யாத நிலை ஏற்­ப­டு­மென சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் சிப்லி பாறுாக் தலை­மையில் கடந்த வியாழக்கிழமை பொறி­யி­ய­லா­ளர்கள் அந்த இடத்­திற்கு சென்று அந்த வீதியின் நிர்­மாண வேலை­களை பார்­வை­யிட்­டனர்.
மழை காலங்­களில் நீர் இயற்­கை­யா­கவே வாவிக்குள் வடிந்­தோடும் அப்­பாதை முற்­றாக தடைப்­ப­டு­வ­தனால் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்­படும். இதனால் ஆண்­டாண்டு கால­மாக கால­போ­கத்தில் நெற்­ப­யிர்ச்­செய்கை செய்­யப்­ப­டு­கின்ற அந்­தக்­கா­ணிகள் இவ்­வாறு புதி­தாக அமைக்­கப்­படும் வீதியின் கார­ண­மாக அக்­கா­ணி­களில் எதிர்­கா­லத்தில் பயிர் செய்­ய­மு­டி­யாத நிலை ஏற்­படும் என இதன் போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.
இது சம்­பந்­த­மாக ஆராய்ந்து உட­ன­டி­யாக இதற்­கு­தீர்வு காணும் வித­மாக உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­பதன் மூலம் நீர் தேங்கி நிற்கும் இப்­பி­ரச்­சி­னைக்கு முடிவு காணப்­பட்­டது.
இதற்­கான திட்ட வரை­பு­களை உட­ன­டி­யாக தயா­ரித்து அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பிர­தம பொறி­யி­ய­லா­ளரும் ஜப்­பா­னிய நிறு­வன வதி­விட பொறி­யி­ய­லா­ளரும் உறு­தி­ய­ளித்­த­தாக கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் சிப்லி பாறுாக் தெரி­வித்தார்.
வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பிர­தம பொறி­யி­ய­லாளர் எம்.நிசார்­தீன், விசேட திட்ட முகா­மைப்­பி­ரிவின் பொறி­யி­ய­லா­ள­ர்கள் ஏ.ஹகீம், கே.றன்­ஜித்­குமார் ஜப்­பா­னிய நிறு­வன வதி­விட பொறி­யி­ய­லாளர் யசோரோ நறு­கா­வான், ஜப்­பா­னிய ஒப்­பந்­தக்­கா­ரரின் பொறி­யி­ய­லாளர் கே.ஒமோரி ஆகியோர் இங்கு சமுக­ம­ளித்­தி­ருந்­தனர்.
இது தொடர்­பாக அப்­ப­குதி விவ­சா­யி­களும் பொது­மக்­களும் என்­னிடம் சுட்­டிக்­காட்­டி­ய­தை­ய­டுத்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட அபி­வி­ருத்திக் குழுவின் கடந்த கூட்­டத்தில் கூறப்­பட்­ட­தற்­கி­ணங்க இதை பார்வையிட்டு இதற்கான தீர்வு பெறப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் மண் முனைத்துறைப்பாலத்தின் நிர்மாண வேலை கள் முடிவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments