Latest News

November 24, 2013

மாவீரர் தினத்தை வரவேற்கும் விண்ணுலகம்
by admin - 0

மாவீரர் நாளில் விளக்கு ஏற்றக்கூடாது, கூட்டம் கூட கூடாது என்று எல்லாம் பல கட்டுப்பாடுகளை தமிழர் பிரதேசங்களில் எல்லாம் போட்டுவருகிறது இலங்கை இராணும். ஆனால் இவை அனைத்தையும் மீறி இயற்கையே சிலவேளைகளில் தீபம் ஒன்றை வானில் ஏற்றலாம் என்று கூறப்படுகிறது. என்ன புரியவில்லையா ? ஆம் சிலவேளை இது நடக்கலாம் !

எமது விண்வெளியில் பல லட்சக்கணக்கான, விண் கற்கள் பறந்தவண்ணம் உள்ளது. அதில் ஒன்று தான் ஐசோன் எனப்படும் விண் கல்லாகும். இதனை 2012ம் ஆண்டு தான் கண்டு பிடித்தார்கள். குறிபிட்ட இந்த விண் கல் சுழல்வதால், அது தன்க்கு என்று ஒரு புவியீர்ப்பு விசையை வைத்துள்ளது. இக் கல்லில் பல வாயுக்கள், தாதுக்கள் மற்றும் கனிமப்பொருட்கள் உள்ளது. தற்போது இரவுவேளைகளில் இந்தியா, இலங்கை, போன்ற நாடுகளில் இதனை வெறும் கண்களால் காணமுடியும். இது இம் மாதம் 28ம் திகதிவரை கண்ணுக்கு புலப்படும் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் இதில் ஒரு விடையமும் உள்ளது.

இக் கல்லானது 26ம் திகதி இரவு(அதாவது 27 அதிகாலை) சூரியனை அண்மிக்கிறது. இந்தவேளை அக் கல்லில் உள்ள வாயுக்கள் வெப்பம் தாங்க முடியாது வெடிக்கலாம். மற்றும் கல்லில் உள்ள கனிமப் பொருட்களும் வெடித்து சிதறலாம் என்று கூறியுள்ளார்கள் விஞ்ஞானிகள். எனவே வானில் ஒரு பாரிய தீபத்தை 27ம் திகதி அதிகாலை எதிர்பாக்கலாம். இலங்கையில் தமிழர்களை தீபம் ஏற்ற கூடாது என்று இராணுவம் தடுத்து வருகிறது. இந்த விண் கல்லை தடுக்க முடியுமா ? இது இயற்கைக்கும் அப்பால்பட்டது அல்லவா ... 

இது இவ்வாறு இருக்க லண்டனில் வழமைபோல எக்ஸெல் மண்டபத்தில் காலை 11.00 மணி முதல் மாவீரர் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்(TCC) தெரிவித்துள்ளார்கள்
« PREV
NEXT »

No comments