கவிஞர் ஜெயபாலன் இன்று மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வே குடியுரிமை பெற்ற ஜெயபாலன் அண்மைக்காலமாக தமிழகத்தில் தங்கியிருந்தார்.
அவர் கடந்த வாரம் இலங்கை சென்று கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் சென்று அங்கு யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் மகாநாட்டையும் நடத்தியிருந்தார்.
இன்று அவரின் தாயின் நினைவு தினமாகும். இதனை முன்னிட்டு மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கவிஞர் ஜெயபாலன் ஆடுகளம் திரைப்படத்திலும் நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
No comments
Post a Comment