தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை போரின் பயன்படுத்தினார்கள் எனவும், சிறுவர்களையும், பெண்களையும் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினார்கள் எனவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது.
இந்நிலையில், தலைமைத்துவ பயிற்சி என்ற போர்வையில் அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவது அம்பலமாகியுள்ளது.
பாடசாலைகளில் தரம் 8ற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில் பயிற்சிகளுக்காக இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுவதுடன், அவர்களுக்கான பதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் சிறுவர்களுக்கு அவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடும், மற்றும் பயிற்சி பெறும் சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நடவடிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வாறான பதிலை வழங்கப்போகின்றது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments
Post a Comment