திருமண கேக்கில் மணமக்கள் ‘தலை’... அதிர்ந்து போன உறவினர்கள்
திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம். காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை விரும்பும் மனிதர்கள், தங்களது சினிமா ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆரம்பகாலத்தில் வெறும் கேக்காக ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது. தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க திகில் பட ரசிகர் தனது திருமண கேக்கை வடிவமைத்த முறையைப் பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அப்படி என்ன மாடல் என்று நீங்களும் பாருங்களேன்...
No comments
Post a Comment