தமிழக அரசின் மாணவர் கைது உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைக்கு மத்தியில்
தமிழக மாணவர்கள் தங்கள் முள்ளிவாய்க்கால் பரப்புரை சுடரினை
முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். தமிழ்நாட்டில்
ஜந்து இடங்களில் இருந்து மாணவர்களின் சுடர்பயணம் தொடங்கப்பட்டபோது அதனை
தமிழக காவல்துறையினர் தடுத்து மாணவர்களை கைதுசெய்துள்ளதுடன் சுடர்
பயணத்திற்கு தடைவித்துள்ளார்கள் இன்னிலையில் மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடர்
முள்ளிவாய்க்கால் வரை செல்லவேண்ம் என்ற இலக்கிற்கு அமைவாக நீலகிரி
மாவட்டத்தில் ஏற்றப்பட்ட சுடர் தமிழக காவல்துறையின் பல்வேறு
அச்சுறத்தலுக்கு மத்தியில் இரகசியமான முறையில் பரப்புரையினை மாணவர் பிரபா
தலைமையில் இன்று பிற்பகல் சுடரினை ஏந்தியவாறு முள்ளிவாய்க்கால் முற்றத்தினை
சென்றுள்ளார்கள்.
விடுதலை உணர்வுடன் பல்வேறு கோசங்களை தாங்கியவாது முள்ளிவாய்க்கால்
முற்றத்தினை சென்றடைந்துள்ளார்கள்.அங்கு சுடரினை பழ.நெடுமாறன்,
உணர்ச்சிகவிஞர் காசிஆனந்தன், மாவைசேனாதிராசா,பொ.மணியரசன்,உள்ளிட்ட
தமிழ்அமைப்பு தலைவர்கள் சுடரினை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
No comments
Post a Comment