Latest News

November 09, 2013

யாழ்.பல்கலைக்கு டிச.1 வரை விடுமுறை
by admin - 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11 ஆம்
திகதி திங்கட்கிழமையிலிருந்து டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரையிலும்
விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சகல பல்கலைக்கழகங்களுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழு அறிவித்திருந்தது. இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளதுடன்,
அது தொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பீடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளிப்படுத்ததாத போதும் இந்த விடுமுறைக் காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் எவரும் வரவேண்டாம் என்ற அறிவுறுத்தல் போடப்பட்டுள்ளது. அத்துடன் நாளை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் மாணவர்கள்
அனைவரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு விடுதிகளிலிருக்கும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments