Latest News

November 09, 2013

காமன்வெல்த்: இந்தியா சார்பில் சல்மான் குர்ஷித் பங்கேற்பு: வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேட்டி
by admin - 0

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்வார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். 
மேலும் பேசிய அவர், இலங்கை செல்லும் சல்மான் குர்ஷித், அங்கு கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்வார். மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கு முன் நடந்த சில காமன்வெல்த் மாநாடுகளில் பிரதமர் பங்கேற்கவில்லை.  மாநாட்டில் பங்கேற்க இலங்கை செல்லும் இந்திய குழுவுக்கு தலைமை ஏற்பது யார் என்றும் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. இந்திய குழு யாழ்ப்பாணம் செல்வது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை. சல்மான் குர்ஷித் உடன் சவ்தீஸ் சர்மா மற்றும் பவன் கபூர் என்ற இரு அதிகாரிகளும், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோர் செல்வார்கள். இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தம் குறித்து அந்நாட்டு அரசுடன் சல்மான் குர்ஷித் ஆலோசனை நடத்துவார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்கள் குறித்தும் விவாதிப்பார் என்றார்.
« PREV
NEXT »

No comments