சீனாவைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று யுவதியொருவரின் மார்பில் புதிய முகத்தினைக்
வளர்த்து வெற்றிகரமான சத்திர சிகிச்சை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். சீனாவின் புஜியான் மாகாணத்தின் புஷொஊ நகரில் கடந்த வாரம் இந்த சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
ஷு ஜியான்மெய் என்ற 17 வயதாகும் யுவதியொருவர் அவரது 5ஆவது வயதில் தீயில் சிக்கியுள்ளார். இதனால்
காது, புருவம், புருவம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்படைந்துள்ளன. ஆனால் செலவு செய்து பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள சிறிய மீன்பிடி கிராமத்திலுள்ள ஷுவின் குடும்பத்தினரால் முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் மார்பில் திசுக்களை வளர்த்து முகமாற்று சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள வைத்தியர்கள் குழுவொன்று முன்வந்துள்ளனர். இதன்படி சிகிச்சைக்குத் தேவையான திசுக்களை யுவதியின் மார்பில் வளர்த்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்
டுள்ளது. இதனால் தற்போது மீண்டுமொருமுறை ஷுவுக்கு காது, கன்னம், தாடை, புருவம் கிடைத்துள்ளன.சத்திரசிகிச்சையினால் 12 வருடங்களின் பின்னர் தற்போது சரியான முறையில் தன்னால் சிரிக்க
முகத்தசைகள் ஒத்திசைவதாக கூறியுள்ளார் .
No comments
Post a Comment