Latest News

November 02, 2013

“காமென்வெல்த்” இலங்கை மாநாட்டை பகிஸ்கரிக்கக் கோரி பிரிட்டிஷ் தமிழர் போராட்டம்
by admin - 0

இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்க கோரி இன்று மாலை லண்டனில் 4 மணி முதல் 7 மணி வரை மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.இப்பேரணி Embankment நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து 10, Downing Street முன்பாக
நிறைவடைந்தது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் மற்றும் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டினை புறக்கணிக்க கோரி மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் பிரித்தானிய பிரதமரின் இலங்கை பயணத்தை நிறுத்த வேண்டும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்றமுக்கிய விடயங்களை மையப்படுத்தி கோஷங்க‌ளை எழுப்பியவாறு மக்கள் உணர்வெழுச்சியுடன் இதில் கலந்து கொண்டதை காண கூடியதாக இருந்தது.

பொதுநலவாய மாநாட்டின் கொள்கைகளுக்கு எதிரான வகையில் சிறிலங்காவில் நடாத்தப்பட இருக்கின்ற மாநாட்டினை நடாத்துவது, மற்றும் அதில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர், இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் முடிவினை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையினால் இது ஒழுங்கு செய்யபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

.இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

மாபெரும் அடக்கு முறைக்குள் தினமும் வாடும் எமது உறவுகள் தாயக மண்ணில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த துணிந்து வரும் நிலையில் அவர்களது வெளிப்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரித்தானிய தமிழர்கள் அலை அலையாக இவ்வாறான பேரணிகளில் கலந்து கொள்வது காலத்தின் கடமையாக மாறிவிட்டது என்பது வெளிப்படையான உண்மையே.

« PREV
NEXT »

No comments