கொழும்பில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில், இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்
மு.கருணாநிதியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்று காலை சென்னையில் வைத்து இந்த
சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, கொழும்பு மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடிய நிலை இருப்பதாக, சிதம்பரம், கருணாநிதியிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சிதம்பரம், இலங்கை மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் தாம் மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தி இருப்பதைப் போன்று, ஏனைய
அமைச்சர்களும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாக
தெரிவித்தார். எனினும் இதற்கு இறுதி தீர்மானம் எடுக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment