Latest News

November 19, 2013

வன்னி மரணங்கள் குறித்து போலிக் கணக்குகளை காட்டுமாறு அரசாங்கத்தினால் வற்புறுத்தப்பட்டேன் - மருத்துவர் வரதராஜா
by admin - 0

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், வன்னியில் இடம்பெற்ற பொது மக்களின் மரணங்கள் தொடர்பில் போலியான கணக்குகளை தெரிவிக்குமாறு, தாம் இலங்கை அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டதாக, முல்லைத்தீவில் செயற்பட்ட வைத்தியர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் உள்ள அவர், இந்திய தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அரசாங்க படையினரின் தாக்குதலில் பாரிய எண்ணிக்கையிலான பொது மக்கள் காயமடைந்தனர்.

அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க, முல்லைத்தீவில் இருந்த வைத்தியசாலையில் போதிய மருந்து பொருட்கள் காணப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களை அரசாங்க படையினர் கைது செய்து, தடுப்பில் வைத்து, சித்திரவதைக்கு உட்படுத்தி, இந்த உண்மைகளை மறைத்து ஊடகங்களுக்கு அரசாங்கத்துக்கு சார்பான தகவலை வெளியிடுமாறு வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த காலக்கட்டத்தில் தமது குடும்பத்தை பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்து செய்ய வேறு வழி இன்றி, தாம் அரசாங்கத்தின் வற்புறுத்தலுக்கு இணங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த நிலையில் திறந்த மனத்துடன் தாம் உண்மைகளை கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments