Latest News

November 24, 2013

தமிழக மீனவர் விடயத்தில் இந்தியா உணர்ச்சியற்ற நிலையில் உள்ளது
by admin - 0

தமிழக மீனவர் பிரச்சினை தொடர் பில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் கடந்த 21 ஆம் திகதி அப்பாவி தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப் பட்டிருப்பதை மிகுந்த மன வேத னையுடன் மீண்டும் ஒரு தடவை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். உலக மீனவர் தினத்தன்று இந்த சட்ட விரோத சம்பவம் நடந்திருப்பது கவ லை அளிக்கிறது என்று குறிப்பிட் டுள்ளார்.
மேலும், அவர் குறிப்பிட்டுள்ளதா வது, இந்திய அரசு இந்த விடயத்தில் மௌனமாக, உணர்ச்சியற்ற நிலை யில் இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அமைதியாக வாழ்வாதா ரத்தில் ஈடுபடும் போது இலங்கைக் கடற் படையினரால் கொடூரமாகத் தாக்கப்படுவது அதிகரித்துச் செல்கிறது.
இந்திய அரசு இதையெல்லாம் பார்த்து மௌனமாக இருப்பதால்தான் இலங்கை கடற்படையினர் தைரியம் பெற்று மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை சட்ட விரோதமான முறையில் கைதுசெய்து செல்கின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள மீனவ சமு தாயத்தினர், உலக மீனவர் தினத்தை மகிழ்ச் சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத் தில், அப்பாவித் தமிழக மீனவர்களும் அவர் கள் குடும்பத்தினரும் வேதனை அடையும் வகையில் இத்தகைய செயலை இலங்கை கடற்படை செய்துள்ளது.
இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்க ளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி விட்டது. என்றாலும், இந்திய அரசு இதுவரை தனது கடும் எதிர்ப்பை தெரி விக்கவில்லை. நடுக் கடலில் நடக்கும் தாக் குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர இந்திய அரசு தூதரக அளவிலும் பேச்சு நடத்தவில்லை.
பல்லாயிரக்கணக்கான நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வரும் இத் தகைய சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் இந்திய அரசு தொடர்ந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பதால், தமிழக மீனவர்கள், தங்கள் சொந்த அரசே, தங்களை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதாக கடும் மனவேதனையில் உள்ளனர்.
எனவே, இந்திய அரசும் நீங்களும் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு, தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறைகளில் உள்ள 80 தமிழக மீன வர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நமது மீனவர்களின் 47 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments