இலங்கைக்கு வருகைதந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு இன்று புதன்கிழமை ரயிலில் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டகாரர்கள் அநுராதபுரத்தில் ரயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கெலும் மக்ரேவின் டுவிட்டர் பதிவுகள்
11.04 AM – ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலை இடைமறித்திருக்கிறார்கள்….
11.12 AM- நாம் இந்த ரயிலில் பயணிக்கும் செய்தியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு யார் கூறினார்கள்?
11.42 AM- ரயில் முன்னோக்கிச் செல்ல முடியாதபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் பாதையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
12.11 PM- நூற்றுக்கணக்கானோர் தடையாக இருக்கிறார்கள்.
12.34 PM- சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் வருகை தந்தார். நாம் செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையாக இருப்பதால் மீண்டும் கொழும்புக்குத் திரும்புமாறு கூறினார்.
12.36 PM- அடுத்துள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
1.24 PM- நாம் ரயிலிலிருந்து இறங்கிவிட்டோம். கருத்து சுதந்திரத்துக்கும் பொதுநலவாயத்தின் பெறுமதிக்கும் என்னவாயிற்று?
No comments
Post a Comment