Latest News

November 20, 2013

எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம் -கலா­நிதி தயான் ஜய­தி­லக
by admin - 0

இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற தூக்­கு­மே­டையில்" நிறுத்தும் மாநா­டா­கவே மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாடு அமையப் போகின்­றது. எனவே டேவிட் கம­ரூனின் கருத்­துக்­களை குறைத்து மதிப்­பி­ட­லா­காது எனத் தெரி­வித்­துள்ள கலா­நிதி தயான் ஜய­தி­லக.
அர­சாங்கம் இப்­போ­தி­ருந்தே இதற்கு முகம் கொடுப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தயா­ராக வேண்­டு­மென்றும் இல்­லா­விட்டால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம் என்றும் அவர் எதிர்வு கூறி­யுள்ளார்.
இது தொடர்­பாக கலா­நிதி தயான் ஜய­தி­லக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் அச்­சு­றுத்­தலை நாம் குறைத்து மதிப்­பி­டவோ அல்­லது அதனை கணக்­கி­லெ­டுக்­காது இருக்கவோ கூடாது.
அவ­ரது கருத்தில் நவ­நீ­தம்­பிள்­ளையை இணைத்துக் கொண்டு இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான முழு ஆத­ர­வையும் பிரிட்டிஷ் வழங்கும் என்றும் கமரூன் தெரி­வித்­துள்ளார்.
2012, 2013 ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணையைப் போன்று 2014 ஆம் ஆண்டு அமையப் போவ­தில்லை. அது பயங்­க­ர­மா­ன­தாக அமையும்.
கடந்த ஆண்­டு­களில் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­க­ளா­னது 2016ஆம் ஆண்டில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள எம்மை சர்­வ­தேச விசா­ரணை என்ற தூக்கு மேடையில் நிறுத்­து­வ­தற்­கான முன்­னேற்­பா­டுகள் ஆகும்.
இலங்கை அர­சாங்கம் இதற்கு எதி­ராக தலை­கீ­ழாக நின்று அடம் பிடித்­தாலும் கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் எது­வுமே நடக்கப் போவ­தில்லை. மாறாக ஜெனீ­வா­வுக்கே வெற்றி கிடைக்கும். 2012, 2013 இல் வாக்­கெ­டுப்பு தோல்வி கண்­டது அப்­ப­டி­யானால் 2014 இல் எவ்­வாறு வெல்­ல­மு­டி­யு­மென சிலர் கேட்­கலாம்.
ஆணைக்­கு­ழுவில் எமது நட்பு நாடுகள் இருக்­கின்­ற­னவே எனக் கூறலாம். அவ்­வாறு அங்கம் வகித்த நிலை­யி­லேயே 2012இல் தோல்வி கண்டோம்.
இம் முயற்­சி­யா­னது ஜனா­தி­ப­தி­யி­னதும் மக்­க­ளி­னதும் கண்­களில் மண்ணை தூவு­வது போலா­ன­தாகும்.இவ் ஆணைக்­கு­ழுவில் மீண்டும் எமது நட்பு நாடு­க­ளான 6 நாடு­களே அங்கம் வகிக்­கின்­றன.அதா­வது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீ­ரியா, சவூதி அரே­பியா அந் நாடு­க­ளாகும்.இந் நாடுகள் இருப்­பதால் வாக்­கெ­டுப்பில் எம்மால் வெல்ல முடி­யாது.

வடக்கு தேர்தல் தொடர்பில் அர­சாங்­கத்தின் மதிப்­பீடும் வவு­னி­யா­விற்குத் தெற்கில் தேர்தல் தொடர்பில் எதிர்க்­கட்­சிகள் மதிப்­பீடு போன்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடை­பெறும் ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டை மதிப்­பிட முடி­யாது. இத் தேர்­தல்­களின் முடி­வுகள் தோல்­வி­யா­கவே அமைந்­தது. அது போன்றே மார்ச் மாத மாநாடும் அமையப் போகின்­றது.
2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிர­தமர் கமரூன் அரசு டேவிட் மிலிபேண்ட் தலை­மையில் நவ­நீ­தம்­பிள்­ளையின் ஒத்­து­ழைப்­புடன் இதே போன்ற முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.
அதன் போது அக் கூட்­ட­ணிக்கு 12 வாக்­கு­களே கிடை­த்தன. இலங்­கைக்கு 29 வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. ஆனால் நான்கு வரு­டங்­க­ளுக்கு பிறகு என்ன நடந்­துள்ளது.
இலங்­கைக்கு நேர­டி­யா­கவே விஜயம் செய்த கமரூன் ஜெனீ­வாவில் இலங்­கையை தோல்­வி­ய­டையச் செய்வேன் என அச்­சு­றுத்தல் விடுத்து சென்­றுள்ளார். இவ்­வா­றான நிலை­மைக்கு இலங்கை எப்­படித் தள்­ளப்­பட்­டது.
எமக்கு நட்பு நாடுகள் உள்­ளன எனக் கூறு­வது வெறும் எண்­ணிக்கை கணக்­காகும். கம­ரூனின் அச்­சு­றுத்தல் செயற்­படத் தொடங்­கினால் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
இம் மாநாட்டில் இலங்கை கலந்­து­கொள்­ளா­விட்­டாலும் தனித்து தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும். அத் தீர்­மானம் எவ்­வாறு அமையும் என்­பதை ஏற்­க­னவே தருஷ்மன் அறிக்­கையில் வெளியி­டப்­பட்­டுள்­ளது. அதுதான் தூக்கு மேடைக்­கான சர்­வ­தேச விசா­ரணை என்ற தீர்ப்­பாகும்.
இத் தீர்ப்­புக்கு அமைய உலகின் பலம் பொருந்­திய நாடுகள் தத்­த­மது பாரா­ளு­மன்­றங்­களில் பிரே­ர­ணை­களை நிறை­வேற்றி பல்­வே­று­வி­த­மான பொரு­ளா­தார தடை­களை விதிக்க ஆரம்­பிக்கும்.
இதனால் மக்கள் கஷ்­டங்­க­ளுக்கு தள்­ளப்­ப­டு­வார்கள். வேலை­யில்லாப் பிரச்­சினை தலை­தூக்கும். அத்­தோடு பொரு­ளா­தாரத் தடை­களால் நாட்டு மக்­களின் வாழ்க்கை நடை­மு­றைகள் தலை­கீ­ழாக மாறும்.
அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே, 2009ஆம் ஆண்டு வெற்றி 2012, 2013 ஆண்­டு­களில் பெற்ற தோல்­வி­க­ளையும் பாட­மாகக் கொள்ள வேண்டும்.
எதிர்­வரும் 4 மாதங்­களில் ஜெனீவா போராட்­டத்­திற்கு தீர்க்­க­மான ராஜ­தந்­திர ரீதியில் புத்திக் கூர்­மை­யுடன் காய் நகர்த்­தல்­களை அர­சாங்கம் நகர்த்த வேண்டும். தயா­ராக வேண்டும்.
இது தவிர்க்க முடி­யா­த­ சவா­லாகும். இந்த சர்­வ­தேச பொறி முறையால் நாம் பெற்ற வெற்­றிக்கும் கௌர­வத்­திற்கும் இழுக்கு ஏற்­படும்.
இதனால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி நாடு உரு­வா­வ­தற்கு தேவை­யான சர்­வ­தேச மற்றும் தெற்­கா­சிய வல­யத்தின் எழுத்து மூல­மான நிபந்­த­னைகள் தயா­ராகும் நிலை உரு­வாகும்.

பொது­ந­ல­வாய மாநாடு
நடந்து முடிந்த பொது­ந­ல­வாய மாநாடு தொடர்பில் பல­வி­த­மான கருத்­துக்கள் வெளியி­டப்­ப­டு­கின்­றன. ஆனால் இது தொடர்பில் மத்­தி­யஸ்­த­மான கருத்­தையே கூற விரும்­பு­கிறேன்.
ஒரு முறை ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் மாவோ சேதுங் இவ்­வா­றா­ன­தொரு கருத்தை தெரி­வித்­தி­ருந்தார். ஸ்டாலின் நூற்­றுக்கு 70 வீதம் சரி­யா­னவர் 30 வீதம் பிழை­யா­னவர் என்றும் மாவோ சேதுங் கூறி­யி­ருந்தார்.
இதே­போன்று, டென்­ஷி­யா­வே­பென்னும் மாவோ சேதுங் தொடர்­பாக இவ்­வாறு கூறி­யி­ருந்தார். மாவோ சேதுங் 70 வீதம் பிழை­யா­னவர். ஆனால் 30வீதம் சரி­யா­னவர் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.
பொது­ந­ல­வாய தலை­வர்கள் மாநாடு மற்றும் ஏனைய சிறிய மாநா­டுகள் தொடர்பில் எனது விளக்­கமும் இதுவே ஆகும்.

வெற்றி
முதலில் இம் மாநாட்டின் வெற்றி தொடர்பில் பார்ப்­போ­மானால் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­
ப­க் ஷவின் நட­வ­டிக்­கைகள் நாட்­டுக்கு கௌர­வத்தை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் அமைந்­தி­ருந்­தது.ஜனா­தி­ப­தியின் மாநாட்டு உரை மற்றும் மாநாட்டின் அனைத்து நிகழ்­வு­களும் பெரு­மைப்­படக் கூடிய விதத்தில் அமைந்­தி­ருந்­தன. நாட்­டையும் மக்­க­ளையும் நேசிக்கும் ஜனா­தி­ப­தி­யான தனது பிர­தி­பிம்­பத்தை நிலை­நாட்டிக் கொண்டார்.
பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் ஏகா­தி­பத்­திய முயற்­சிக்கு மத்­தியில் ஜனா­தி­ப­தியின் நகர்­வுகள், கம­ரூ­னிற்­கான பதில்கள் அர­சியல் ரீதி­யாக எதிர்­பார்ப்­ப­வர்­க­ளையும் இணக்­கப்­பாட்­டுக்கு உட்­ப­டுத்­தி­யது.
இம் மாநாட்டில் இரு­த­ரப்பு பிரிவு காணப்­பட்­டது. ஆனால் அதனால் இலங்­கைக்கு பாதிப்­பில்லை. அரச தலை­வர்­க­ளிடம் மாறு­பட்ட கருத்­துக்கள் காணப்­பட்­டன.
நமக்கு சாத­க­மற்ற தரு­ணத்தில் இம் மாநாடு நடை­பெற்ற போதும் இலங்­கையின் யதார்த்­த­மான சூழ்­நிலை உல­கிற்கு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது மட்­டு­மன்றி, இதில் கலந்துகொண்ட நாடு­களும் தெளிவு­பெற்­றன. இதனால் சில நாடு­களின் இலங்கை தொடர்­பான நிலைப்­பாட்டில் மாற்­றங்கள் ஏற்­பட்­டன. விஷே­ட­மாக, இம் மாநாட்டில் கலந்துகொண்ட சிங்­கப்பூர் பிர­தமர் லீசென் ஒரு நாட்டின் உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களில் தலை­யி­டு­வ­தற்கு வேறு எந்த நாட்­டிற்கும் உரிமை கிடை­யாது.
சிங்­கப்­பூரில் தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். அவர்கள் ஏனைய மக்­க­ளுடன் ஒரே குடும்­பத்தை போன்று வாழ்­கின்­றனர். அதே­போன்று, இலங்­கை­யிலும் சிங்­கள, தமிழ் மக்­களை ஒரே குடும்­ப­மாக நோக்கவேண்­டு­மென தெரி­வித்தார். இதற்கு முன்பு இவர் இவ்­வா­றான கருத்தை வெளியிட்­ட­தில்லை. இதேபோன்று, வேறு பல நாட்டுத் தலை­வர்­களும் இலங்­கையை ஆத­ரித்­தனர். இது எமக்கு கிடைத்த வெற்­றி­யாகும்.

தோல்வி
ஆனால், மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பிலும் நாட்டுத் தலைவர் மற்றும் வடபகுதி தொடர்பில் வெளிக்காட்டிய செய்திகள் சாதகமற்றதாகவே காணப்பட்டன. இது இலங்கையின் எதிராளிகளுக்கு விருந்தாக அமைந்தது. கமரூனின் யாழ். விஜயம் தமிழ் இனவாத சக்திகளின் பரம்பலுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.
இந்தியாவின் பிரதமர் வருகைதராமை தோல்வியாகும். ஆனால், குர்ஷித்தின் வருகை எமக்கு ஆதரவாக அமைந்தது.மறுபுறம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வெற்றிகிடைத்துள்ளது. இவ்வாறு மாநாட்டை முழுமையாக நோக்கினால் நூற்றுக்கு 70 வீதம் வெற்றியும் 30 வீதம் தோல்வியுமே என்றுதான் கூறவேண்டும்.
« PREV
NEXT »

No comments