Latest News

November 20, 2013

யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

இதில் சிந்திக்க வேண்டியது என்ன என்றால் கலப்பு திருமணம் நல்லது ஆனால் தமிழர்களை அழித்து தமிழ் பெண்களின் கர்ப்பை மானத்தை சூறை ஆடிய சிங்கள இராணுவத்தை மணம் முடிப்பது ஏற்றுகொள்ள முடியாதது அப்படி அவர்கள் காதலித்து மணம் முடிப்பதாயின் ஏன் அவர்கள் திருமணத்தை இராணுவ பிரசன்னம் மூலம் நடத்துகிறார்கள் அதுவும் அவர்களின் சிருடை தரித்து இதற்கான காரணம்.

உலகத்துக்கு தமிழர்கள் சிங்களவர்கள் கணவன் மனைவி போன்றவர்கள் (மாண்பு மிகு வடக்கு முதலைச்சர் சொன்னது போன்று )என்று கட்டுவதற்கு  முக்கியமாக தூர நோக்கத்தில் இது ஒரு இன அழிப்பின் மறைமுகமான அழிப்பாகும் அதாவது சிங்களவர்கள் தமிழர்கள் கலப்பு திருமணங்கள் இலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களின் வீதாசாரத்தை குறைக்கும் இதனால் தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இலங்கை இராணுவம் வடகிழக்கில் பெருமளவில் நிலைகொண்டு இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று 

மற்றும் தமிழ் பெண்கள் பெரும்பாலும் கட்டாயத்தின் நிமிர்த்தம் இராணுவ  திருமணத்துக்கு தள்ளப்படுகிறார்கள் அதாவது இராணுவத்தின் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண்கள் வேறு வழியின்றி இப்படியான திருமணத்துக்கு தள்ளப்படுகிறார்கள் 

இதை தடுப்பதற்கு தமிழ் ஊடகங்கள் மற்றும் இளைய சமுதாயம் விழிப்புடன் செயட்பட வேண்டும் 

சரவணை மைந்தன் 


« PREV
NEXT »