தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சத்தியப்பிரமாண நிகழ்வினைப் புறக்கணித்தோமே தவிர அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இல்லையென்று கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ரில்ஹோ சிற்றி ஹோட்டலில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழர் விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமான கனகலிங்கம் சிவாஜிலிங்கம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெறாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தோமே தவிர தமிழரசுக் கட்சி கூறுவது போன்று நாங்கள் தீவிரவாதப் போக்கில் நடக்கவில்லை.
அத்துடன், ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டினை மாற்றி அவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, ஒரு நிகழ்ச்சி நிரலில் கீழ் இடம்பெற்று வருகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லையென்ற காரணத்தினால் 'எட்டாப்பழம் புளிக்கும்' என்று நாங்கள் இவற்றினை கூறுவதாக சொல்வார்கள். ஆனால், வடமாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்த காலத்திலிருந்து நாம் இதனை வலியுறுத்தி வருகின்றோம்.
கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே தமிழரசுக் கட்சி இவ்வாறு செய்திருக்கின்றது.
உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சியை வென்றெடுப்பதற்கான திட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். அத்துடன், சர்வதேச விசாரணை தேவை என்பதனையும் வலியுறுத்தி வருவதுடன், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் நாம் பாடுபடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்

No comments
Post a Comment