இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா மீது கனடா குற்றஞ்சாட்டிய போதிலும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய நாடுகளின் செயலாளரின் பேச்சாளர் இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இப்போது திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து கவனிக்கப்படும், இது தவிர வேறு பல பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கமலேஷ் சர்மாவிற்கு அப்பதவியிலிருந்து விலகும் நோக்கமெதுவும் இல்லை. மேலும் அவர் தனது பணியினை தொடர்ந்தும் முன்னெடுப்பார் எனவும் அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் இலங்கைக்கு சார்பாக செயற்படுவதாக கனடா குற்றம் சாட்டியிருந்ததுடன், இலங்கையில் இடம்பெறவுள்ள மாநாட்டையும் புறக்கணிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, சர்மா மீது நம்பிக்கை உள்ளது என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment