Latest News

October 12, 2013

பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது – கனடா
by Unknown - 0

பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பும், பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் அமைப்பும் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கத் தவறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தை ஏற்படுத்துமாறு சர்வதேச சமூகம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகவும், இது குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பும் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என்ற காரணத்தினாலேயே பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அமர்வுகளில் பங்கேற்கபதனை நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடிப்படை கொள்கைகள் கோட்பாடுகளை உதாசீனம் செய்யும் இலங்கைக்கு எவ்வாறு இரண்டாண்டுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஜனநாயக கொள்கைகள் கோட்பாடுகளை மதிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments