தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும் தனித்து இயங்கப் போவதும் இல்லை வட மாகாண சபையை புறந்தள்ளவோ அல்லது தனித்து இயங்கவோ போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி)ரெலோ மற்றும் புளட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்று பகல் ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்கே.சிவாஜிலங்கம் மற்றும் புளெட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகீயோர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடை பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்ப என்பது ஒரு ஐனநாயக அமைப்பாகும்.இதில் தனிப்பட்ட சிலர் முடிவுகளை எடுப்பது பிழையனெவும் அதனை மக்களுக்காக தெரியப்படுத்தும் வகையிலேயே நாம் நேற்று இடம் பெற்ற வட மாகாண சபைக்கான உறுப்பினர்களின் வேட்பாளர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வை பகிஸ்கரித்தோம்.
இதற்காக யாரும் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி விட்டதாகவோ அன்றி வட மாகாண சபையின் செயலபாடுகளுக்கு குந்தகமதாக இருப்பதாகவோ கருதக்கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம்.
இந்த வகையில் எமக்கு அமைச்சர் பதிவி வழங்கப்படாவிட்டாலும் கூட நாம் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயல்படுவோம்.
தற்போது கூட ஆயுத கலாச்சாரம் பற்றி தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் பேசப்படுகின்றது.இது அவர்களுடைய பிரச்சினையும் எண்ணமும் ஆகும்.
நேற்று பதிவியேற்பு வைபவத்தில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐயா குறிப்பிட்டார் ரெலோ இயக்கத்தை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன்ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு அகிம்சை வழிக்கு திரும்பியுள்ளார்.
அப்படியாயின் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இருக்கும யார்ஆயுதங்களுடன் காணப்படுகின்றார்கள் என்பதை சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று கூறினார் . நாம் பதவிகளை கேட்டவர்களுக்கு கொடுக்கவில்லை கேட்காதவர்களுக்கே கொடுத்துள்ளோம் என்று. இவர் யார் எந்தக் கட்சியின் தலைவர்.
ஜனாதியின்முன் சத்தியப் பிரமாணம் செய்யும் விடயத்தில் நாம் அனைவரும் இணைந்து நின்று கூறினோம்.
ஐனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டாம் என்று இதனையே மாவை சேனாதிராசாவும் கூட தெரிவித்தார்.
இதனை கேட்காது சம்பந்தர் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோர் தமது விருப்பில் செய்தமையால் மாவை சேனாதிராசா நாட்டை விட்டு சென்று இருந்தார்.
இத்தகைய நிலமைகள் தொடரக் கூடாது என்பதில் நாம் இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கை மூலம் பொது மக்களுக்கு தெரிவித்தள்ளதுடன் எதிர் காலத்தில் தலைமைகள் நடக்கக் கூடாது என்பதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
No comments
Post a Comment