நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள்
தலைவர்கள் அமர்வில் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள்
மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது என
கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல்வேறு காரணிகளை கருத்திற் கொண்டே பிரதமர்
இறதித் தீர்மானத்தை எடுப்பார் எனத்
தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டில்
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய பிரதமரின் தீர்மானம் ஆளும் கட்சியின்
எதிர்காலத்தையே நிர்ணயிக்கக் கூடிய வகையில் அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அமர்வுகளில் பங்கேற்கக் கூடாத என
தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக
வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மீனவர் பிரச்சினையும் பிரதமரின் இலங்கை விஜயத்தை நிர்ணயிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் உறுதியாக அமர்வுகளில்
பங்கேற்பாரா என்பதனை குறிப்பிட முடியாது என இந்திய தகவல்களை ஆதாரம்
காட்டி கொழும்பு ஊடகம் தகவல்
வெளியிட்டுள்ளது.
No comments
Post a Comment