Latest News

October 14, 2013

புளொட் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
by admin - 0


தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் புளொட் அமைப்பின் வட மாகாண
சபை உறுப்பினர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனன் மற்றும் ,
தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தில் புளொட் அமைப்பின் செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தம்
முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த
வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை புளொட் உறுப்பினர்கள் இருவர் உட்பட ஒன்பது வட
மாகாண சபை உறுப்பினர் புறக்கணித்திருந்தனர் இந்த நிலையிலேயே புளொட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்துகொண்டனர். இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ரொலோ சார்பாக வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments