Latest News

October 14, 2013

கிறிஸ்மஸ் தீவிலிருந்து திரும்பிய 40 பேர் கைது
by admin - 0

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் திருப்பிய னுப்பப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து   நேற்று திங்கட்கிழமை காலை இவர்களை கைது செய்துள்ளதாக கட்டுநாயக்க பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு கடலிலிருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாலுக்கு படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரி சென்றுள்ளனர்.

இவர்களை கிறிஸ்மஸ் தீவில் தங்கவைத்த நிலையில் அவுஸ்ரேலியாவில் இருந்து விமானமூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம்.மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 40 பேரை இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பிய னுப்பப்பட்டோர் திங்கட்கிழமை காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். அவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவர்களில்  12 சிறுவர்கள்இ 25 பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 பேரும் இமுல்லைத்தீவைச் சேர்ந்த 2 பேருமாக 40 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் தலா 20 இலட்சம் ரூபா செலுத்தி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருப்பியனுப்பப்பட்டவர்களை விமானநிலையத்தில் வைத்து பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஜ.டி) ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் நிறைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 
« PREV
NEXT »

No comments