"கொக்கோ கோலா' போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர்
பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்்தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக அறிவித்தார் அமைச்சர்
ஐங்கரநேசன். விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல்்அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில்
பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன்
கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட
நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களில் மற்றும் கொக்கோகோலா' போன்ற
மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம். எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும்
நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது. இயலுமானவரை இவ்வாறான குளிர்பானங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் எமது பணம் எமக்குள்ளேயே சுழற்சியுடன்
நின்று கொள்ளும். உள்ளூர்
உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் அவர்களின் தயாரிப்பில் உருவான பழரசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார
No comments
Post a Comment