Latest News

October 10, 2013

கடத்தப்பட்ட லிபிய பிரதமர் விடுவிக்கப்பட்டார்
by admin - 0

கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படும் லிபியாவின் பிரதமர் அலி ஸைடான் சில மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தலைநகர் திரிபோலியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து லிபிய பிரதமர் கடத்திச் செல்லப்பட்டிருந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்திருந்தன. 

வழக்குத்தொடருநர் நாயகத்தின் கட்டளையின்படி அலி ஸைடானை தாம் கைதுசெய்ததாக லிபிய அரசாங்க சார்பு கிளர்ச்சிக் குழுவான புரட்சிவாதிகள் நடவடிக்கை அணி  கூறியது.
« PREV
NEXT »

No comments