Latest News

October 10, 2013

பிரித்தானியா பொதுநலவாயத்துக்கான தனது நிதியை குறைத்துள்ளது
by admin - 0

அங்கத்துவ நாடுகளின் தலைமைத்தும் மற்றும் செயல்திறன் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பிரித்தானியா பொதுநலவாயத்துக்கான தனது நிதியை குறைத்துள்ளது.

பொதுநலவாயத்திலுள்ள 53 நாடுகளில் 52 நாடுகள் இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாமல் இலங்கையில் நடக்கவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன.

பிரித்தானிய அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் பொதுநலவாயத்துக்கான நிதியை 3 மில்லியன் பவுண்களில் குறைத்துள்ளது. இதற்கு மேலாக கனடா வழங்கும் நிதியை குறைக்கப்போவதாக பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் கூறியிருப்பது மேலும் அச்சமூட்டுவதாக உள்ளது.

கனடா, இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்ள, நீதித்துறைக்கு புறம்பான கொலைகள் தொடர்பான பிரச்சினைகளை காரணம்காட்டி கனடா  இந்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன்இந்த மாநாட்டில் பங்கேற்க தீர்மானித்துள்ளதை செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விமர்சித்துள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கையிலிருக்கும் போது மனித உரிமை மீறல்கள்பற்றி இலங்கை ஜனாதிபதியிடம் பிரஸ்தாபிக்கப்போவதாக கமரொன் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments