Latest News

October 05, 2013

10 மணி நேர துப்பாக்கிச் சண்டை! ஆந்திராவில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் கைது!
by admin - 0


ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், மன்னா இஸ்மாயில் 10 மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் உயிரோடு பிடிபட்டனர். மதுரை அருகே திருமங்கலத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு வைத்தது, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, பெங்களூர் பாஜக அலுவலக குண்டு வெடிப்பு ஆகியவற்றில் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் உள்ளிட்டோர் தேடப்பட்டு வந்தனர். இவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்தது. 


« PREV
NEXT »

No comments